Thursday, November 3, 2016

திருவள்ளுவர் தனித்தன்மை

திருவள்ளுவர் தமிழ்மொழியின் தலைசிறந்த அறிவு நூலை இயற்றியவர்!
அவர்  மனித குலத்துக்கு மிகவும் தேவையான நற்கருத்துக்களை,
மிகப் பெரிய கல்வியறிவு பெற்று, உண்மை அறிவையும்  விளக்கி
எழுதியுள்ளார்!

அவர்,

முதற்குறட்பாவிலேயே


அகர முதல எழுத்தெல்லாம்


என்று கூறியமையால் பல மொழிகளின் இந்நூல்களைப் படித்தறிந்துள்ளார்
என்பது புலனாகிறது! முதற்குறளிலேயே பல மொழிகளின் முதல் எழுத்தைத்
தாம் அறிந்து கொண்டதை நமக்கு அறிவிக்கிறார்! அடுத்த குறளில்
‘’கற்றதனால் ஆய பயன்’’,


என்று எழுதியமையால், கற்றலின் உயர்வைப் புலப்படுத்துகிறார்!
பின்னர்  ‘’நூலோர் தொகுத்தவற்றுள்’’, ‘’ யாம் மெய்யாக் கண்டவற்றுள்’’
‘’நுண்ணிய நூல் பல கற்பினும்’’ என்ற தொடர்களால் தாம் பல நூல்களைப்
படித்தறிந்துள்ளதையும் நமக்கு அறிவிக்கிறார்!

2nd one